Jul 09

நீண்ட நாள் மன அழுத்தம் காரணமான இழப்பீடு தொடர்பாக வழக்கு

வேலைப்பழு காரணமாக நீண்ட நாள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான ஒன்ராரியோ வாழ் மக்கள் சார்பில் இழப்பீடு கோரி வழக்கு ஒன்று  தொடரப்பட்டுள்ளது.


ஒன்ராரியோ மாகாண  தொழிலாளர்களைப் பிரதிநித்துவம் செய்யும் Goldblatt Partners  என்ற சட்ட நிறுவனத்தால் இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


நீண்டகாலமாக மன அழுத்தத்தைத் தரும் தமது தொழில்களின் காரணமாகக் கோரப்பட்ட இழப்பீடுகள் நிராகரிக்கப்பட்டதனால் பணியிடப் பாதுகாப்பு மற்றும் காப்புறுதி வாரியம் மற்றும், ஒன்ராரியோ மாகாண அரசின்  தொழில் அமைச்சு  ஆகியவற்றுகு எதிராக, இழப்பீடு நிராகரிக்கப்பட ஊழியர்களிளின் சார்பாகவே இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

இது  தொடர்பாக  தொழில் அமைச்சின் அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில்  இது தொர்பான சட்டரீதியான ஆவணங்களை அமைச்சு பரிசீலனை செய்வதாகவும் வேறு எதுவித கருத்துக்களும் தற்போது தெரிவிக்க முடியாது எனவும் கூறினார்.