Jul 09

கனேடிய அரசும் அமெரிக்காவின் புதிய பயணத் தடைகளும்


அமெரிக்க அதிபர் ட்ரம்பினால் அறிமுகப்படுத்தப்பட  புதிய பயணத் தடைகள் கடந்த வியாழக்கிழமை ( ஜுன் 27)  முதல் அமுலுக்கு வந்துள்ளன. இத்தடைகள் பிரதானமாக ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், யேமன் ஆகிய ஆறு இஸ்லாமிய நாடுகளுக்கே பொருந்தும். இத்தடை உத்தரவு ஆறு மாதங்களுக்கு அமுலில் இருக்கும்.


இது தொடர்பாக கனேடிய அரசு மேலதிக தகவல்களுக்காகக் காத்திருப்பதாக அறியவந்துள்ளது. இக்குறிப்பிட்ட நாடுகளின் குடியுரிமையைக் கொண்ட இரட்டைப் பிரசைகள் (dual nationals) கனேடியக் கடவுச் சீட்டுடன் பயணிக்கும் போது, இத்தடையுத்தரவால் பாதிக்கப்பட மாட்டார்கள் என   கனேடியக் குடிவரவு அமைச்சர் அஹமட் ஹூசேனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் தாங்கள் அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து மேலதிக விபரங்களுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


 மேலும் இந்த  ஆறு நாடுகளைத் தமது பூர்வீகமாகக் கொண்ட கனேடிய நிரந்தர வதிவிட உரிமை உடையவர்கள், அமெரிக்காவிற்கான விசாவைக் கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் எதுவித பாதிப்புக்களும் இல்லை எனவும் அவர் மேலும் கூறினார்.