Mar 23

2ஆவது நாளாக தொடரும் விமலின் உண்ணாவிரதம்

வாகன மோசடி விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச  ஆரம்பித்த உணவுத் தவிர்ப்பு போராட்டம் நேற்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது.

 

நேற்று காலை மெகஸின் சிறைச்சாலையில் அவருக்கு வழங்கப்பட்ட காலை நேர உணவினை அவர் பெற்றுக்கொள்ள மறுத்ததன் ஊடாக அவரது இந்த தனிப்பட்ட போராட்டத்தை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியிருந்த நிலையில் அவரது இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டம் 2ஆவது நாளாக  தொடர்ந்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்தார்.