Mar 23

ஐ.நா. மனித பேரவையின் அலுவலகம் கொழும்பில் அமைக்கப்படவேண்டும்; அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல்

சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோருக்கு முன்பாகவே தமிழர் பிரச்சினையை உலகறிய செய்தேன்   என உலக தமிழர் பேரவையி்ன் தலைவர்    அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல் தெரிவித்தார்.

இலங்கையின் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானிக்க அடிக்கடி இலங்கைக்கு ஐ.நா.வின் பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என்பதோடு கொழும்பில் ஒரு காரியாலயத்தை அமைத்து அவர்களின் செயற்பாடுகளை கண்காணிக்க வேண்டும்  என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன அழிப்பு தொடர்பாக நான் கருத்து தெரிவிக்கவில்லை என்கிறார்கள். விக்னேஸ்வரன் தற்போதுதான் இனஅழிப்பு தொடர்பாக கதைக்கின்றார்.

நான் 15 வருடங்களுக்கு முன்னரே  அமெரிக்காவில் பகிரங்கம் படுத்தியுள்ளேன். இதை அறியாத இளம் வயதினர் எம்மை நோக்கி இனத்துரோகிகள் என்கின்றனர்

நான் தமிழன் என்று சொல்வதில் பெருமைப்படுகின்றேன். நாம் அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு ஒற்றுமை, விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும்.

ஆனால் எமது அடித்தளத்தில்  உள்ள அடிமைத்ததனத்தை அகற்ற முற்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.