Jul 08

பிரான்சுடன் இணைந்து செயலாற்ற சீனா இணக்கம்

பொருளாதார பூகோளமயமாதல் மற்றும் பன்முகத்தன்மையை ஏற்படுத்தல் ஆகியவற்றின் பொருட்டு பிரான்சுடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi) தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜேன் யீவ்சுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், நடைமுறைக்கு ஏற்றவாறு இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பிலும் மேற்படி இரு நாடுகளும் அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங் ஆகியோரும் பிரான்ஸ் மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவுகளை இனிவருங்காலங்களிலும் வலுப்படுத்துவது தொடர்பில் அக்கறை செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி இரு நாடுகளும் சர்வதேச விவகாரங்களில் ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்பாடல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.