Jul 08

இரண்டாவது காலாண்டில் இத்தனை கோடி ஸ்மார்ட்போன்களா? விற்பனையில் அசத்தும் சீன நிறுவனம்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் 23.16 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது முந்தைய காலாண்டை விட 70 சதவிகிதம் அதிகம் ஆகும்.சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியாவில் 2017-இன் இரண்டாவது காலாண்டில் 23.16 மில்லியன் அதாவது 2.31 கோடி ஸ்மாரப்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது இந்த காலாண்டில் மட்டும் சியோமி நிறுவனம் 70 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லெய் ஜுன் தெரிவித்துள்ளார். 

சர்வதேச வியாபாரத்தில் முதலீடு, புதுவகை விற்பனை, ஆய்வு மற்றும் தயாரிப்புகளில் புதுமை உள்ளிட்டவைகளை செய்து இத்தகைய விற்பனையை சியோமி அடைந்துள்ளது. 

இத்தகைய விற்பனையை தொடர்ந்து லெய் ஜுன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2017 இரண்டாவது காலாண்டில் மட்டும் 2.31 கோடி ஸ்மார்ட்போன்களை விநியோகம் செய்துள்ளோம், இது முந்தைய காலாண்டை விட 70 சதவிகிதம் அதிகம் ஆகும்.

சியோமி வரலாற்றில் சாதனை மைல்கல்லாக இந்த விற்பனை வளர்ச்சி அமைந்துள்ளது. இத்தகைய விற்பனை வளர்ச்சி சியோமி வளர்ச்சியை பிரதிபலிக்கிறது." என குறிப்பிட்டுள்ளார்.