Jul 08

கிளிநொச்சியில் இடம்பெற்ற நா.பன்னீர்செல்வம் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா!

நா.பன்னீர்செல்வம் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மண்டபத்தில் நூலாசிரியர் தலைமையில் இடம்பெற்றது.

‘விதைப்புக்களின் அறுவடையே தொற்றா நோய்கள்’, ‘தடம்’ ஆகிய நூல்களே மேற்படி நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் போதனா வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி சத்தியமூர்த்தி, மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.