Apr 06

அரசியலில் கால்பதிக்க களமாகும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - தயாளன்

தமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில் ரணமாகவுள்ளது.

ஆனால் இதே அவலத்தை - அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பை தமது அரசியல் பிரவேசத்திற்கானமுன்பள்ளியாகப் பலரும் கருதுகின்றனர். ஏற்கெனவே அரசியலில் இருப்போர் தம்மைநிலைநிறுத்த இதே களத்தைப் பயன்படுத்துகின்றனர். பிணம் விழுந்தால்தானே சவப்பெட்டிக்கடைக்காரரின் வீட்டில் உலை எரியும்.

இவ்வருடம் மட்டு. - யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் என்ற அறிமுகத்துடன்முள்ளிவாய்க்காலுக்கு உரிமைகோரிப் புறப்பட்டுள்ளனர். மொந்தைதான் புதிதே தவிர கள்ளுபழையதுதான். அரசியல்வாதிகளை எதிர்ப்பது - நிராகரிப்பது போன்ற அறிவிப்புக்கள் கடந்தவருடமும் நாம் கண்ட காட்சிகள்தான். முடிவு என்னவென்றால் அது அரசியற்பிரவேசமாகவேஇருக்கும. இந்தப் பொம்மலாட்டங்களின்போது மேலிருந்து கயிற்றை ஆட்டுபவர்கள்சந்தேகமில்லாமல் புலம்பெயர் தேசத்தவர்கள்தான்.

2017 முள்ளிவாய்க்காலில் அரசியல்வாதிகளை எதிர்த்துக் குரல் கொடுத்த ஒரு பெண்மணி கடந்தஉள்ளுராட்சி சபைத் தேர்தலில் முள்ளிவாய்க்காலை நினைவூட்டியபடியேஅறிமுகப்படுத்தப்பட்டார். ஜனநாயகப் போராளிகள் கட்சியை மக்கள் ஏற்கிறார்களோஇல்லையோ அது வேறு விடயம். கடந்த ஆண்டு அரசியல்வாதிகளை அங்கிருந்துஅகற்றுகிறோம் என்ற நாடகத்துடன் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசியை கறுப்புசட்டையணிந்த மாணவர்கள் தள்ளிக் கொண்டுபோய் வெளியில் விட்டனர். இதற்கானஉத்தரவைப் பிறப்பித்தவர் மாணவர் தலைவர் கிருஸ்ணமேனன். இவர் இன்று தமிழ் மக்கள்கூட்டணியின் இளைஞரணி முக்கியஸ்தர். இவர்கள் யுத்தம் முடிந்த காலத்தில்அரைக்காற்சட்டையில் இருந்து முழுக்காற்சட்டைக்குக்கூட மாறியிருக்க மாட்டார்கள்.

உறவுகளை இழந்த சொந்தங்களை கேணையர்களாக்குகிறார்களா இவர்கள்?

மாகாண சபை இந்நிகழ்வைப் பொறுப்பெடுத்தால் குழப்பம் ஏற்படும் என அறிவித்தவர்கள்இவர்கள். மதகுருமார், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், முன்னாள்போராளிகள் (இதில் ஒருவர் 16 வயது மகனை எறிகணை வீச்சில் பறிகொடுத்தவர். இவரதுமகள் போராளி என்ற நிலையில் இருந்து மாவீரர் என்ற நிலையை அடைந்ததும்முள்ளிவாய்க்காலில்தான்.) எனப் பலரும் முயற்சியெடுத்து முதல்வரையும் மாணவர்அமைப்பினரையும் சந்திக்க வைத்தனர். (இதற்கு முன்னதாக முதல்வர் கூட்டிய கூட்டத்தில்இவர்கள் கலந்துகொள்ளவில்லை)

இச்சந்திப்பின்போது தாங்கள் கொண்டுவந்த உரையைமுள்ளிவாய்க்காலில் வாசிக்க வேண்டும் என அடம்பிடித்தார் கிருஸ்ணமேனன். ‘அதுசாத்தியமில்லை! நீங்கள் எதிர்பார்க்கும் விடயம் என்னவென்பதைக் கூறுங்கள் அதனை எனதுஉரையில் சேர்க்கலாமா என ஆராய்கிறேன்’ என்றார் முதல்வர்.சுடரேற்றும் நேரம் குறித்தவிடயமும் சிக்கலாயிருந்தது.

முதல்வர் திட்டமிட்டதில் இருந்து சில மணி நேரம் தள்ளி நிகழ்வுநடக்க வேண்டும் என வலியுறுத்தினர் மாணவர்கள்.‘ஓம் ஓம் அப்பதான் அவுஸ்ரேலியா,இங்கிலாந்தில் உள்ளவையெல்லாம் முழிச்சிருப்பினம்’ என நக்கலாகப் பதிலளித்தார் முதல்வர்.அப்போதுதான் சமரச முயற்சிகளில் ஈடுபட்டவர்களுக்கு இக்குழப்பங்களுக்குக் காரணம்புலம்பெயர் தேசத்தவர்கள்தான் என்ற உண்மை புரிந்தது.முதல்வர் வாசிக்க வேண்டும் எனமாணவர்கள் கொண்டுவந்த உரையே புலம்பெயர் தேசத்திலிருந்துதான் அனுப்பப்பட்டதுஎன்பது அடுத்தடுத்த நாட்களில் ஊர்ஜிதமாயிற்று.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில்அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் சகலருடனும் பேசிப் பொறுப்புகளைக் கையளிப்பார்என்றார் முதல்வர். குறிப்பிட்ட நேரம் தாண்டி சில மணி நேரம் சென்றும் வரவில்லைமாணவர்கள். எனவே மாணவர்கள் வராததால் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன எனஅறிவித்துவிட்டு புறப்பட்டார் சபை முதல்வர். அந்தவகையில் முள்ளிவாய்க்கால் முற்றம்அலங்கரிப்பு முதலான பணிகள் ஜனநாயகப் போராளிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

பிற்பகல் மாணவர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் வந்தனர். எங்களுக்கு வகுப்புஇருந்ததால் குறிப்பிட்ட நேரத்துக்கு வரவில்லை என்றார் கிருஸ்ணமேனன். முதல்வர் இந்தஒழுங்குபற்றிக் குறிப்பிட்டபோதே அந்நேரம் எங்களுக்கு வகுப்பு உள்ளது என்றுசொல்லியிருந்தால் இவர்களுக்கு வசதியான நேரத்தில் அப்பணியை மேற்கொள்ளுமாறுஅவைத் தலைவருக்கு முதல்வர் சொல்லியிருப்பார். மாணவர்கள் எடுக்கும் முடிவே தமது முடிவுஎன்றார் கஜேந்திரன். எப்படியும் இரு நிகழ்வுகளாகத்தான் நடக்கும் என்பது அவரது அசையாதநம்பிக்கை. 2009 இற்குப் பின்னரான தேர்தல் முடிவுகள் போலவே இந்த நம்பிக்கையும்அவருக்குக் கைகொடுக்கவில்லை.

தனியாக முள்ளிவாய்க்காலில் சுடரேற்றப் புலம்பெயர் தேசத்தவரின் ஏற்பாட்டில் முனைந்தனர்சிலர். முள்ளிவாய்க்கால் இளைஞர்கள் தடுத்தனர். உடனே பிரதேச வேறுபாட்டை உருவாக்கமுனைந்தார் ஒருவர். எனினும் இறுதியில் முள்ளிவாய்க்கால் முற்றத்திலேயே எல்லோரும்சுடரேற்ற வேண்டி வந்தது. தமிழ்த் தேசிய முன்னணியினருக்கும் ஏமாற்றம்தான். திருவிழாவுக்குவந்த கூட்டம்போல் தலைப்பாகை கட்டிக் கொண்டு வந்தவர்கள் போய்விட, ஆரம்பத்தில் சிரமப்பட்டவர்களே நிகழ்வு முடிந்ததும் எல்லாவற்றையும் செய்து முடிக்க வேண்டியிருந்தது.

எண்ணெய் கொண்டுவந்தவர் முதல்வர். பந்தங்களை ஒழுங்குபடுத்துவதற்காக எண்ணெயைவிசுவமடுவுக்குக் கொண்டு சென்றவர் அவைத் தலைவர். எண்ணெயில் தோய்த்து எடுத்ததைசாதனையாகச் சொன்னார்கள் மாணவர்கள்.

நினைவேந்தலுக்கு இரு நாட்கள் முன்னதாக அங்குள்ள நிலைமைகளை உறுதி செய்ய முதல்வர்முள்ளிவாய்க்காலுக்குச் சென்றார். அதற்கு முன்னதாக கிருஸ்ணமேனன் சென்றார். அங்குஜனநாயகப் போராளிகள் கட்சியினர் எல்லா ஏற்பாட்டையும் செய்திருந்தனர். இந்தப்பைப்பெல்லாம் எங்கே எடுத்தது என்ற விசாரணையுடன் இதை அப்படி மாற்ற வேண்டும்.

அதை இப்படிச் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முனைந்தார் இவர். ‘செய்தஏற்பாடுகள் எதையும் மாற்ற முடியாது. மேலதிகமாக எதைச் செய்ய வேண்டும் எனக்கருதுகிறீர்களோ அதைச் செய்யலாம்” எனப் பதிலளிக்கப்பட்டது.

தொலைக்காட்சி ஒன்றி நிருபர் அங்கே இவரைப் பேட்டி கண்டார். தாங்கள்தான் இதுவரைஅங்கு மேற்கொள்ளப்பட்ட வேலைகளைச் செய்ததாகவும் இனிமேல் என்னென்னசெய்யவுள்ளோம் என்றும் இவர் தெரிவித்தார். இந்த மூன்று நாட்களும் முள்ளிவாய்க்கால்மக்கள் நடந்ததை எல்லாம் பார்த்திருப்பார்களே என்றுகூட அவர் எண்ணவில்லை. ‘அவங்கள்மூண்டுநாளா நிண்டு எல்லாம் செய்தவங்கள், இவங்கள் தாங்கள்தான் செய்ததெண்டுசொல்லுறாங்களே, அவங்கள் என்ன நினைப்பாங்கள்’ என்று ஒருவர்மற்றொருவரிடம்கேட்டார்.

அதற்கு மற்றவர் ‘மகாபாரதப் போரில் கர்ணன் செய்த தர்மம் எல்லாவற்றையும்தனக்குத் தரச் சொல்லிக் கேட்டார் கிருஷ்ணர். அதைக் குடுத்ததால கர்ணன் செய்த தர்மம்எல்லாம் இல்லாமல் போய் விடுமே? பேசாமல் எல்லாத்தையும் சகிச்சுக் கொண்டுதான்போகவேணும்’ எனப் பதிலளித்தார்.

முதல்வர் வந்ததும், பொதுச் சுடரேற்றும் இடத்துக்குச் சென்றார். ஏற்கனவே முறுகிக் கொண்டஇரு தரப்பினரையும் முதல்வரிடம் தமது அபிப்பிராயங்கள், ஆலோசனைகளைத்தெரிவிக்குமாறு கூறப்பட்டது. மாணவர் அவையினர் உடனே தொலைபேசியை எடுத்துக்கொண்டு சற்றுத் தள்ளி எவருடனோ பேசினார்கள். ‘ஒரு பிரச்சினையுமில்லை. இந்த நிகழ்வுமுடியும்வரை இங்குள்ள தொலைத் தொடர்புக் கோபுரங்கள் இயங்காமலிருந்தால் எல்லாம்சரியாக நடக்கும்;’ என இக்காட்சியைப் பார்த்த ஒருவர் கூறினார்.

முள்ளிவாய்க்காலை தமது பதவிக்கான சத்தியப்பிரமாணம் செய்யும் இடமாகத் தேர்ந்தெடுத்தார்சிவாஜிலிங்கம். பரபரப்பாக ஏடாகூடமாக ஏதாவது செய்வதுதானே இவரது சுபாவம்.

மகிந்தவுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது, அவர் போட்டியிடும் குருநாகலுக்குப்போய் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது, அமெரிக்கத் தேர்தலுக்காக நல்லூர்கந்தசாமி கோயிலில் தேங்காய் உடைப்பது. விஜி என்ற மாணவியை பாலியல் வல்லுறவுக்குஉள்ளாக்கிப் படுகொலை செய்தோரையும் நினைவுகூர தீருவிலில் பொதுத்தூபி அமைக்கமுயற்சிப்பது, செங்கோலைத் தூக்கிக் கொண்டு ஓடுவது போலவேதான் முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணத்தையும் செய்தார்.

இன்னொரு அரசியல்வாதி தவராசா. இவர் மாகாண சபைஉறுப்பினர் என்ற வகையில் சபைத் தீர்மானத்தின்படி இவரது கொடுப்பனவிலிருந்தும்குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டது. நினைவேந்தல் முடிந்ததும் ‘என்ரை காசைத் தாங்கோ’என இவர் கேட்கும் காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. ‘என்ன பிறவியப்பா இவன்?’எனப் பலரும் கேட்டனர். இவரது பணத்தை திருப்பி வழங்க மட்டக்களப்புப் பல்கலைக்கழகமாணவர்கள் உண்டியல் குலுக்கினர். மிகச்சிரமத்துடன் அந்த உண்டியல் தொகையைக் கொண்டுவந்து தவராசா வீட்டுக் கேற்றில் கட்டிவிட்டுப் போயினர்.

இவ்வாறானகுழப்பங்களுக்கு மத்தியில் இவ்வருடம் நினைவேந்தலை தாங்கள் ஒழுங்குபடுத்தவுள்ளதாகதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் அறிக்கை விட்டார்.

இப்போது மாணவர்கள் விடுகின்றனர். ஆளாளுக்கு வருடாவருடம் இப்படியே தொடர்ந்துகொண்டே போவார்கள் போல உள்ளது. இந்தத் தேசிய விடுதலைப் போராட்டத்தில்பல்கலைக்கழகத்தின் பங்களிப்பை நிராகரிக்க முடியாது. குறிப்பாக படையினர் நெருக்கடிகள்அதிகரித்த காலங்களிலும் மாவீரர்நாள் நினைவேந்தலை எந்த வடிவிலாவது செய்து முடிப்பர்.

இது ஒரு நீண்ட பாரம்பரியத்தின் தொடர்ச்சி - ஒரு அஞ்சலோட்டம்.

லெப். நிதி (கிறிஸ்துநாதன் சுதாகர், பனங்கட்டிக்கொட்டு, மன்னார் 18-12-1984)லெப்.காண்டீபன் (ஸ்ரீஸ்கந்தராசா - முல்லைத்தீவு, யாழ். பல்கலைக்கழக மாணவரவைத்தலைவர்), கப்டன் அலெக்ஸ் (நித்தியானந்தன் நல்லூர் வடக்கு), கப்டன் வாசு (உருத்திராபதிசுதாகர் வல்வெட்டித்துறை 14.02.1987), லெப். சுதர்சன் (பூபாலபிள்ளை சிவகுருநாதன்,ஆரையம்பதி, மட்டக்களப்பு 28.06.1987), கப்டன் முத்து (குமாரசூரியர் முரளிதரன்,களுவாஞ்சிக்குடி 28.06.1987), லெப்.கேணல் சந்தோசம் ( கணபதிப்பிள்ளை உமைநேசன் -அரியாலை, யாழ்ப்பாணம் 21.10.1987), கப்டன் பிரான்சிஸ் (இராசையா சடாட்சரபவான்,கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு 31.10.1987), பிருந்தான் (சுப்பிரமணியம்நிமலேந்திரன்),இறுதியாக செஞ்சோலைப் பொறுப்பாளர் ஜனனி (நடராசா லலிதா -துன்னாலை, யாழ்.), மாதவன் மாஸ்டர் (ரகுநாதன் பத்மநாதன் - யாழ்ப்பாணம்), புலித்தேவன்(சீவரத்தினம் பிரபாகரன் - புன்னாலைக்கட்டுவன் யாழ்) முதலானோர் பல்கலைக்கழகமாணவர்களாக இருக்கையிலேயே போராட்டத்தில் இணைந்து மாவீரர்களானவர்கள்.குறிப்பாக 1983 இல் பிரதேச பொறுப்பாளர்களாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலர்இருந்தனர்.

இதன் பின்னர், செ.கஜேந்திரன், இ.ஆர்னோல்ட், ப.தர்சானந்த் முதலானோர் பல்கலைக்கழகமாணவர்கள் என்ற நிலையில் இருந்து தமிழரின் போராட்டத்துக்கு ஆதரவாகச் செயற்பட்டபின்னர் அந்த அறிமுகத்துடன் அரசியல்வாதிகளானவர்கள். அஞ்சலோட்டம் போன்றஇவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டதற்காக இந்த அரசியல்வாதிகள் தாம் நினைத்தபடிசெயற்பட முடியாது. (இதற்காக இவர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுகிறோம் என்றுபொருளல்ல)ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும். அதனை இவ்வாறானநினைவேந்தல்களில் திணிக்க முற்படுவது தவறானதாகும்.

இவ்வருடம் மட்டக்களப்பில் நடந்தஊடகவியலாளர் மாநாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அப்பால் தெரிவிக்கப்பட்டகருத்துக்கள் எதிர்கால அரசியலுக்கு இவர்கள் தயாராகி விட்டதை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன. இவர்கள் இந்த அவலத்தை உணர்ந்திருப்பார்கள் என்றில்லை.

முள்ளிவாய்க்கால் அவலம் முடிந்து 10 வருடமாகி விட்டது. அப்போது இவர்களது வயது என்னஎன்பதைக் கணக்கிட்டால் எல்லாம் புரியும். பல்கலைக்கழக மாணவர்கள் என்றால் எல்லாம்தெரியும் என்றும் அர்த்தமல்ல, கடந்த வருடம் கையைச் சுட்டுக் கொண்டோம். எங்கள்பிள்ளைகளின் நினைவேந்தல்களை சஞ்சலமின்றி மேற்கொள்ள வேண்டும். உறவுகளைஇழந்தோரின் நிலையைப் புரிந்து கொண்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள், மதகுருமார் பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாகமுள்ளிவாய்க்கால் மண்ணின் மைந்தர்களின் உணர்வுகளைப் புரிய வேண்டும்.

கடந்த ஆண்டு பழைய சந்தையடியில் தனியாகச் சுடரேற்ற முனைந்தவர்களின் முயற்சியைமுறியடித்த விதம், அங்கு தெரிவித்த கருத்துக்கள் முள்ளிவாய்க்கால் இளைஞர்களின்ஆளுமையை வெளிப்படுத்தின. நிகழ்வு முடிந்ததும் அங்கு நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாகஅவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகள், ஏற்கெனவே இரு ஆண்டுகள் மாவீரர் நாட்களை சிறந்தஒழுங்கமைப்புடன் மேற்கொண்ட விதம் என்பன முள்ளிவாய்க்கால் மக்களிடமே இதனைஒப்படைப்பதுதான் சரியானது என்பதை எடுத்தியம்புகின்றன. காதில் தொலைபேசியைவைத்துக் கொண்டு புலம்பெயர் தேசக் கட்டளைகளை நிறைவேற்றும் முறைமைக்குஅப்போதுதான் முடிவு வரும். இதேவேளை இளைஞர் சக்தியைப் புறந்தள்ள வேண்டும் எனஎவரும் அர்த்தம் கொள்ளவேண்டியதில்லை. மக்களை அணிதிரட்டல் முதலான பணிகளைமாணவர்கள் பொறுப்பெடுக்கட்டும். அப்போதுதான் பிரதேசவாதத்தைத் தூண்டும் சக்திகள்கிழக்கு மக்களைத் தவறாக வழிநடத்த முனைவதைத் தடுக்க முடியும்.