Mar 23

உள்ளக விசாரணைகளை நடத்தி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண வேண்டும் என்கிறார் அங்க

யுத்த குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணைகளை நடத்தி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண வேண்டும்.

தமிழ் சிங்கள மக்கள் புரிந்துணர்வுடன் செயற்படக்கூடிய சூழல் அமைந்துள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமானுஜம் தெரிவித்தார்.

 இந்த ஆட்சிக்காலம் முடிவடைய முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வை பெற்றுத்தருவார். அந்த நம்பிக்கை எமக்கு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

கொழும்பில்  இன்று  நடைபெற்ற  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே   அவர் இவ்வாறு குறிப்பிட்டார்