Mar 23

ஐ.நா.வில் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுவிட்டது புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டறிக்கை

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து புலம்யெர் அமைப்புக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இணைந்து விடுத்துள்ள கூட்டறிக்கை வருமாறு,

இலங்கை தொடர்பில் .நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள 34:1 தீர்மானமானமானது, தமிழ்மக்களுக்கு மீண்டுமொருமுறை நீதி மறுக்கப்பட்டிருப்பதையே உணர்த்துகின்றது. இது உலகத் தமிழர்களுக்கு வருத்தத்தையும், பெருத்த ஏமாற்றத்தையும் தந்திருக்கின்றது.

 ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம்  அரசாங்கத்தக்கு மேலும் இரண்டு ஆண்டு கால அவகாசத்தை கொடுக்கிறது. .நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் அலுவலகம், 2015ல் சமர்ப்பித்திருந்த அறிக்கையில் காத்திரமான பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், மிகவும் நீர்த்துப்போன 30-1 தீர்மானம் ஒன்றே , 2015 ல் நிறைவேற்றப்பட்டிருந்தது.

 அரசாங்கத்தின் ஒத்துழைப்பிலும், பங்களிப்பிலும் நிறைவேற்றப்பட்ட அத்தீர்மானம் முன்வைத்திருந்த விடயங்களை,   அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு 18 மாதங்களை வழங்கியிருந்தது.

அதே சமயத்தில், .நா.வின் மனித உரிமைச்சபை விசாரணைக்குழு  பாதிக்கப்பட்ட தமிழ்மக்களை சந்திப்பதற்கு ஆட்சியாளர்களினால் அனுமதி மறுக்கப்பட்டது என்பதையும் நினைவில் கொண்டுவருகிறோம்.

இந்த அறிக்கை  அரசாங்கம் புரிந்த போர்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை விவரித்திருந்தது. அதே சமயத்தில் ஜேர்மனியின் ப்ரேமன் நகரில் நடந்த ப்ரேமன் மக்கள் தீர்ப்பாயம்இனப்படுகொலைநடந்துள்ளது என்று தீர்ப்பளித்தது.

இலங்கை அரசினை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் .நா பாரப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையுடன் 1.6 மில்லியன் மக்கள் கையொப்பமிட்டிருந்தனர். .நா மனித உரிமைச் பையானது கலப்பு விசாரணை தேவை என்று கூறி   இருக்கிறது. இதை 2015, 2017 ஆகிய இருமுறையும் .நா மனித உரிமைச்சபை ணையாளர்   கூறியிருக்கின்றார்.

ஆனால், செப்டம்பர் 2015 முதல் இலங்யைின் பிரதமரும், அரசுத் தலைவரும, வெளிநாட்டு நீதிபதிகளையும், கலப்பு நீதிமன்றத்தையும் தொடர்சியாக நிராகரித்து வருகின்றனர்.

தீர்மானம் 30-1 முன்வைத்திருந்த, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை திரும்ப அளிப்பது, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை ரத்து செய்வது, சித்தரவதைகள் குறித்து விசாரணை நடத்துவது, பாலியல் வன்முறைகள் குறித்து விசாரிப்பது என்பனவற்றை நடத்துவதாக உறுதி அளித்திருந்த  அரசாங்கம் எதனையும் இற்றைவரை  செய்யவில்லை.

பெரும்பாலான தமிழர்கள் உள்நாட்டு முகாம்களில் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். தமிழர் தாயகப் பகுதியெங்கும்  இராணுவம் நிலைநிறுத்தப்பட்ட நிலையில் தொடர்சியாக காணப்படுகின்றது. அபகரிக்கப்பட்ட தமிழ்மக்களின் நிலங்கள் திருப்பி அளிக்கப்படவில்லை. சித்திரவதையும், பாலியல் வன்முறைகளும் நின்றபாடில்லை. வடக்கு கிழக்கில் இருக்கும்  படையினரது உயர்பாதுகாப்பு வலையங்கள் மூடப்படவில்லை.

நாகரீகமடைந்த எந்த சமூகமும், நவீன வரலாற்றில் சொந்த மக்கள் மீது குண்டுகளையும், தரைப்படை-வான்வெளி தாக்குதலையும் நடத்தியதில்லைஉணவும், மருந்தும் போரின் ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்ட. குற்றவாளியாக நிற்கும்   அரசு தனது குற்றங்களை விசாரிக்க  தகுதியற்றதாக இருக்கிறது.

.நா.  மனித உரிமைச் சபை ஆணையாளரின் அறிக்கை கட்டமைக்கப்பட்ட நிர்வாக குற்றங்களை குறிப்பிடுகிறது, இந்த தன்மையோடு சேர்த்து   ராணுவம், பொலிஸ், உளவுத்துறை ஆகிய தரப்புக்கள்  முழுமையாக குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்து பாதுகாக்கும் வழிமுறையை கொண்டதாக இருக்கிறது.

 குறிப்பாக போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைக்கான குற்றங்கள் குறித்து விசாரிக்க தகுதிமிக்க முடியாத நிலையில்  இலங்கையின்  நீதிமன்ற வழிமுறைகள் உள்ளன. சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை இன்மும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

கொடுத்த வாக்குறுதிகளை வெறும் வாய்மொழிச்சொல்லாக பொருட்படுத்தாத அரசாகவே   அரசாங்கம் இருக்கிறது. இது நீதிமுறைமுக்கு எதிரானதாக இருக்கிறது. காணாமல் போனோர் குறித்த சட்டம்   குறித்து பேசும்பொழுது  இலங்கை அரசுத் தலைவர் சிறிசேனா, தனது அரசு ஒரு பொழுதும்   படையினரை குறிவைக்காது என்று பதிவு செய்திருக்கிறார்.

மேலும்,   நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக், சிறிலங்கா இராணுவத்தின் மீதான அனைத்து போர்க்குற்றங்களையும் மறுத்திருக்கிறார். மேலும், அவர்  அரசு மீது குற்றம் சுமத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக பதிவு செய்திருக்கிறார்.

இலங்கை இராணுவத்தின் பாரிய குற்றங்கள் குறித்து விவாதிப்பவர்கள் நாட்டின் எதிரிகள் என்றும், இராணுவத்தின் எதிரிகள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

பெரும்பான்மை சிங்கள மக்கள் நிறைந்த தெற்கு இலங்கையின் தேசியவாத தொகுதிகளுக்காக தான்தேசிய பாதுகாப்பினை சமரசம் செய்து சிறிலங்கா இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்றம்  அரசுத்தலைவர்  பதிவு செய்திருக்கிறார்.

தற்போதைய இலங்கைத் தீவின் சூழலில் சிறிலங்காவில் ஒரு நம்பகமான தீர்வுகள் கொண்டுவருவதற்குரிய அரசகட்டமைப்பாக, தற்போதைய  அரசு இயங்கவில்லை.

அரசின் மீது எந்தவொரு பிடிப்பும், கட்டுப்பாடும் இல்லாத நிலையில் அரசு தான் கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறைபடுத்துவதோ தன்னுடைய நடவடிக்கை மறுப்பு நிலையையோ நிறுத்துவதோ சாத்தியம் இல்லை.

மனித உரிமைச்சபையினால்  அரசுக்கு கொடுக்கப்படும் கால அவாசகத்தினைக் வைத்துக்கொண்டு, ஒரு புறத்தில் தமிழர்களிடத்தில் இயங்கும் நீதிக்கான மனநிலையை குலைப்பதும், மறுபுறத்தில் வளமான கட்டமைப்புகளை  தமிழர் பகுதியில் கொண்டுவருவதன் மூலமும் சிங்கள குடியேற்றங்களையும் அரசாங்கம்  செய்தும்  வருகின்றது.

அதே சமயம் இனப்படுகொலையின் தடயங்களை அழித்து வருவதற்கும் இந்த கால அளவையும் பயன்படுத்திக்கொள்கிறது. அரசாங்கம் ஒரு பொழுதும் தமிழர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றியதும் இல்லை, அதே சமயம் அரசியல் தீர்வையும் முன்வைத்ததில்லை.

இந்தக் காரணங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு,தமிழர்களின் தேசியத்திற்கான சுயநிர்ணய உரிமையி உறுதி செய்யவேண்டும்

இலங்கை  விவகாரத்தினை ,நா.வின் பொதுச்சபையின் விசாரணைக்கு அனுப்பிட வேண்டும். .நா பொதுச்சபை வழியே, சர்வதேச  குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை  பாரப்படுத்துவதற்கான பரிந்துரையினை .நா . பாதுகாப்பு பேரவைக்கு  வழங்க வேண்டும்.

இலங்கைத்தீவின் இனநெருக்கடிக்கு தீர்வுகாண வடக்கு கிழக்கு பகுதியிலும், புலம்பெயர் தமிழர்களிடத்திலும் பொதுவாக்கெடுப்பினை நடத்துவற்குரிய நிலையை  ஏற்படுத்த வேண்டும்.

ஆகவே மார்ச் 23 ம் திகதி 2017ல் .நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை முற்றாகம் நாம் நிராகரிக்கின்றோம்.