Mar 23

மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் பஷில் சூளுரை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுசெய்த ஊடகவிலாளர் சந்திப்பு இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பத்தரமுல்லையிலுள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உரையாற்றுகையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை எதிர்கொள்ளவதற்கு தயாராகியுள்ளது.

எனவே இனிவரும் தேர்தல்களில் நாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாகவே போட்டியிடவுள்ளோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றது முதல் கட்சிக்கு பாதகம் ஏற்படுத்தும் பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டு வருகிறார் 

அத்துடன் ஒற்றையாட்சிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் எந்தவொரு முறையிலாவது நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அதற்கெதிராக போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தாம் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை தற்போது ஆரம்பித்துள்ளோம் என்றார்