Mar 23

'பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் வழங்கிய உணவை மறக்க முடியாது'


கிளிநொச்சி சமாதான செயலகத்தில் அன்று தமிழ் செல்வன் வழங்கிய உணவை மறக்கமுடியாது எனஅமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்

 

யாழ்ப்பாணத்திற்குவருகைதந்த அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தனது கடந்த கால நினைவுகள் சிலவற்றையும் மீளவும் நினைவு கூர்ந்தார்.

 

அதனடிப்படையில்,எனது தந்தையார் யாழ்.மாவட்ட உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றினார் அந்த வேளையில் நான் மாணவனாக இருந்தபோது இங்கு வந்து கோட்டை வளாகத்தை பார்வையிட்டுள்ளேன்.


இளைஞனாகவும் இந்கு வந்து கீரிமலை கேணியில் நீராடியுள்ளேன். இங்குள்ள மக்கள் விரும்தோம்பல் கரிசனை கூடியவர்கள்.

 

பாடசாலை கல்வியை முடித்துக் கொண்டு ஆடைத் தொழிற்சாலைக்குள் நுழைந்தபோது கொழும்பில் இருந்தாலும் யாழ்ப்பாணத்தில் உள்ள லைடன் ஆடை உற்பத்தி தரம் வாய்ந்ததாக இருந்தது.

 

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் 2002 ஆம் ஆண்டு சமாதான செயலகத்திற்கு சென்றேன் அங்கு தமிழீழ விடுதலை புலிகள் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ் செல்வனுடன்க லந்துரையாடினேன்.


அங்கும் பல உணவுகள் பரிமாற்றப்பட்டு அங்கு சிங்கிறால் உட்பட பல பரிமாறப்பட்டன. ஞாபகத்தில் உள்ளது மிகவும் கஸ்ரமான காலத்தில் கூட தமிழ் மக்களது விருந்தோம்பல் பாராட்டத்தக்கது.


2002 சமாதான செயலகத்திற்கு சென்றபோது  விடுதலை புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ஒருநாள் இரவு தங்கி செல்லவேண்டுகோள் விடுத்தார்.


அதற்கமைய இரவு வேளை நின்றமையால் தான் தெரிந்தது சுற்றுச்சூழல் எவ்வாறு இருக்கிறது என்று  மிகவும் ஆபத்தான சூழல்  மின்சாரம் இல்லத நிலை இவற்றை உணர்ந்து கொண்டடேன்  என்றார்.