Mar 23

வடக்கு கிழக்கில் வேலைவாய்ப்பு கிடைக்கும்; இராஜாங்க அமைச்சர் விஜயகலா

இரண்டாயிரம் ஏற்றுமதியாளர்களை உருவாக்கும் வேலைத்திட்டம் மூலம் வடக்கு கிழக்கில் வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என சிறுவர் மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

 

இரண்டாயிரம் ஏற்றுமதியாளர்களை உருவாக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்ட நிகழ்வும் கண்காட்சியும் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.


ஆகையால் இரண்டாயிரம் ஏற்றுமதியாளர்களை உருவாக்கும் இந்த தேசிய திட்டத்தின் மூலம் வடக்கு கிழக்கில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கவேண்டும்.

வடக்கு கிழக்கில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்களுக்கு ஏற்றுமதி மூலம் வருமானம் கிடைக்க நல்லாட்சி அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்றார்.