Mar 23

வடக்கில் முதலீடு மேற்கொள்பவர்களுக்கு விசேட அறிவிப்புக்கள்; அமைச்சர் மலிக்

வடமாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்பவர்களுக்கு விசேட சலுகைகள் தொடர்பான அறிவிப்புக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் வெளியிடுவார் என வெ ளிநாட்டு ஏற்றுமதி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.


2000 ஏற்றுமதியாளர்களை ஸ்தாபிப்பதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் மற்றும் கண்காட்சி  யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார்


மேலும் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நல்லிணக்கத்தை மேம்படுத்தவும், வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் திடசங்கட்பம் பூண்டுள்ளார்கள்.


வடக்கு மக்களின் பிரதான பிரச்சினையாக உள்ள மீள்குடியேற்றம் அவர்களுக்கான வீடமைப்பு மற்றும் வாழ்வாதார உதவிகள் பெற்றுக் கொடுக்கவேண்டும் அதுமட்டுமன்றி இங்குள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுக்கவேண்டும்.


இதற்கு கைத்தொழில்துறை, நீர், மின்சாரம் பேன்றவற்றை மேம்படுத்தி இங்குள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு செய்து கொடுக்கவேண்டும்.


இதற்கான வழிமுறைகளையும் நிதி முறைமைகளையும் கண்டுபிடிக்கவேண்டும். இதற்காக புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடம் உதவிகள் பெற்றுக்கொள்ளவேண்டும்.

 இந்திய அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக பணியாற்ற வருகின்றோம்  பல வேலைத்திட்டங்களை வடக்கில் செயற்படுத்துவதற்கு கலந்துரையாடி வருகின்றோம்.


அடுத்த மாதம்  26 ஆம் திகதி இந்தியா புதுடில்லி விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள  வேலைத்திட்டங்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்கைச்சாத்திடவுள்ளார் என்றார்