Jul 06

மலைக்க வைக்கும் மலைப்பாம்பையே திகைக்க வைத்த அந்த மங்கை யாரோ? -(VIDEO)

பிரேசிலில் சாலையின் குறுக்கே போக்குவரத்துக்கு இடையூறாக படுத்திருந்த 7 அடி நீள மலைப்பாம்பைப் பெண் ஒருவர், துணிச்சலாகக் கையில் பிடித்து தூக்கிச் சென்று வனப்பகுதியில் விட்ட சம்பவம் வலைதளங்களில் அசுர வேகத்தில் பரவி மக்களை அசர வைத்திருக்கிறது.

பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனிரோ நகருக்கு அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள நெடுஞ்சாலையில் திடிரென போக்குவரத்து நிலைகுத்தியது. காரணம் தெரியாமல் வாகனமோட்டிகள் வரிசையில் காத்திருந்த போது, 7 அடி மலைப்பாம்பு நெடுஞ்சாலையில் படுத்துக் கிடந்தது தெரியவந்தது. 

எனினும், அந்தப் பாம்பின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை அவர்கள் செலுத்தவில்லை.  வாகனமோட்டிகள் அருகில் செல்ல அச்சப்பட்டுக் கொண்டு ஒதுங்கி நின்று அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.  

அப்போது, அங்கே வந்த ஒரு பெண் மலைப்பாம்பை அழகாகக் கையில் பிடித்துக் கொண்டு, அனைவரையும் பார்த்து சிரித்தபடியே அதனைக் கொண்டு போய் அருகில் சாலையோரத்தில் இருந்த வனப்பகுதி அருகே விட்டார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவில் பதிவுசெய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.