Jul 06

பாரிசில் உணர்வுடன் நினைவுகொள்ளப்பட்ட தமிழீழ தேசத்தின தடைநீக்கிகள் நாள்!

பாரிசில் உணர்வுடன் நினைவுகொள்ளப்பட்ட தமிழீழ தேசத்தின தடைநீக்கிகள் நாள்! பிரான்சு பாரிசில் தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நாள் 2017 பாரிஸ் மக்ஸ்டொமிப் பகுதியில் 05.07.2017 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு, மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரை பிரான்சு மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் நித்தி முகுந்தினி அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை 03.12.2007 அன்று கரிப்பட்டமுறிப்பில் வீரச்சாவைத்தழுவிய வீரவேங்கை யாழ்நம்பியின் சகோதரி ஏற்றி வைத்தார்.