Mar 29

மார்ச் 29: யூஜீன் வூசுட்டர், கலைச்சொல்லியலாளர் மறைந்த தினம் இன்று!


யூஜீன் வூசுட்டர் (Eugen Wuster) 10 அக்டோபர் 1898 ஆம் ஆண்டு பிறந்த இவர் 29 மார்ச் 1977 ஆம் ஆண்டில் மறைந்த ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபதிபர் ஆவார்.

கலைச்சொல்லியலில் இவரது முன்னோடி ஆய்வுகள், செயற்பாடுகள் என்பவை காரணமாக இவர் கலைச்சொல்லின் தந்தை எனவும் அழைக்கப்படுவது உண்டு.

இவர் ஆஸ்திரியாவில் உள்ள வீசெல்பர்க் என்னும் இடத்தில் பிறந்தார். 15 வது வயதில் செயற்கை மொழியான எசுப்பரான்டோ மீது இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

விரைவிலேயே, ஒரு எசுப்பரான்டோ மொழிபெயர்ப்பாளராகவும், இது தொடர்பான பல்வேறு கட்டுரைகளின் ஆசிரியராகவும் முன்னணிக்கு வந்தார்.

குறிப்பாக இவரது ஆர்வம் எசுப்பரான்டோ மொழியின் கலைச்சொற்கள், சொல்லாக்கம் ஆகிய துறைகளிலேயே இருந்தது.

மின் பொறியியலில் கல்வி கற்று ஒரு மின் பொறியியலாளரான இவர், பின்னர் தனது தந்தையின் தொழிற்சாலையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

1918 – 1920 காலப்பகுதியில், அவருக்கு 22 வயது ஆகுமுன்பே, புகழ் பெற்ற எசுப்பரான்டோ – செருமன் அகரமுதலியை உருவாக்கினார்.

இவர் வியன்னாப் பல்கலைக்கழகத்தில் கற்பித்திருக்கிறார். இப் பல்கலைக்கழகத்தில் உள்ள யூஜீன்-வூசுட்டர் ஆவணக் காப்பகத்துக்கும், ஆஸ்திரிய தேசிய நூலகத்தில் உள்ள எசுப்பரான்டோ அருங்காட்சியகம் மற்றும் திட்டமிட்ட மொழிகள் பிரிவுக்கும் அடிப்படையான நூல்களும் பிற ஆவணங்களும் வூசுட்டரால் வழங்கப்பட்டவை.

கலைச்சொல்லியல் ஆய்வுகளில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கு வழங்குவதற்கென “யூஜீன் வூசுட்டர் பரிசு” என்னும் பரிசு ஒன்றை வியன்னாப் பல்கலைக்கழகமும், வியன்னா நகரும் சேர்ந்து உருவாக்கியுள்ளன.