Mar 23

எஸ்தோனியாவின் நிலைப்பாடு நம்பிக்கை அளிக்கின்றது : ஐ.நா ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் அமைச்சர்

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா இணைந்து கொள்ள வேண்டும் என்ற எஸ்ரோனியாவின் நிலைப்பாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் வரவேற்றுள்ளார்.

இதேவேளை ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை காத்திரமான பல விடயங்களை சிறிலங்கா தொடர்பில் முன்வைத்திருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளர்.

நேற்று புதன்கிழமை, ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் சபையில் முன்வைக்கப்பட்டிருந்ததோடு, உறுப்பு நாடுகளும் கருத்தினைப் பதிவு செய்திருந்தன.

இது தொடர்பில் கருத்தினை தெரிவித்திருந்த அமைச்சர் மாணிக்கவாசனர்,அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா இணைந்து கொள்ள வேண்டும் என்ற எஸ்ரோனியாவின் நிலைப்பாடு நம்பிக்கை தருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஆணையாளரின் அறிக்கைத் தொடர்பில் தெரிவிக்கையில்

ரோம் பிரகடனத்தின் ஊடாக, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா இணைந்து கொள்ள வேண்டும் எனக் கோரியிருக்கின்றார்.

இது, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு சிறிலங்காவைப் பாரப்படுத்த வேண்டும் என 2015ம் ஆண்டு 1.6 மில்லியன் மக்கள ஒப்பமிட்டிருந்த, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை ஞாபகப்படுத்துகின்றது.

இதேவேளை, ஐ.நாவின் அமைதிப்படையில் சிறிலங்கா படையினரை இணைத்துக் கொள்வதற்கு முன்னராக, அவர்கள் தொடர்பில் பாலியல்ரீதியிரான குற்றச்சாட்டுக்கள், மனித உரிமைமீறல்கள் தொடர்பில் தீவிர முன்அவதானிப்பு அவசியம் எனச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இது சிறிலங்கா படையினரு தமிழ்பெண்கள் மீதான பாலியல்வன்முறைகளை எடுத்துக் காட்டுக்கின்றது.
அத்தோடு, சிறிலங்காவின் பயங்கரவாத தடைச்சட்டம் என்பது தமிழர்கள் மீதே பிரியோகிக்கப்படுகின்றது என்பதனை இம்முறை புள்ளியிட்டுக் காட்டியிருக்கின்றார்.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காவே சிறிலங்காவின் அனைத்து அத்துமீறல்களும் இலங்கைத்தீவில் நடக்கின்றது என்ற நீணடகால எமது குரல் எதிரொலித்திருப்பதனை எடுத்துக்காட்டுகின்றது.

இவ்வாறு சிறிலங்கா தொடர்பிலான உண்மைகளை மீளவும் ஆணையாளரின் அறிக்கை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளதோடு, காத்திரமான பல விடயங்களை முன்வைத்துள்ளது என நா.தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.