Jul 06

கலை’யாத கனவு...

படிக்கின்ற காலத்தில் கோவில்பட்டி பாரதி மன்றத்தின் ஆண்டு விழா நிகழ்வில், நான் கதை-வசனம் எழுதிய ‘ஒரே வாசல்’ எனும் மேடை நாடகத்தில் நானும் நடித்தேன். 

     பிறகு, அறிவொளி இயக்க எழுத்தறிவு கலைப்பயணத்தில் வீதி நாடகக் கலைஞனாய், பல ஊர்களில் பலநூறு நாடகங்களில் நடித்தேன். கவிதை, இலக்கியம் என்று சுற்றி வந்தாலும் கலை தாகம் கொஞ்சமாய் உள்ளுக்குள் இருந்துகொண்டேயிருந்தது. 

      கவிஞர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட இயக்குநர் பி.வி.பிரசாத் (’காதலில் விழுந்தேன்’ வெற்றிப் பட இயக்குநர்), இயக்கி நடிக்கும் ‘சகுந்தலாவின் காதலன்’ திரைப்படத்தில் அவரோடு இணைந்து நடிக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கினார்.

      இப்படத்திற்கு என் இணையர் அ.வெண்ணிலா வசனம் எழுதியிருப்பதோடு, இணை இயக்கத்திலும் பங்கேற்றிருக்கிறார் என்பது கூடுதல் மகிழ்வைத் தருகிறது.

       பெரும் போராட்டங்களுக்குப் பிறகு, தடைகளைத் தாண்டி, காற்றின் விரல் பிடித்து, உங்கள் காதோரமாய் கவிதை சொல்ல வருகிறது... ‘சகுந்தலாவின் காதலன்’ படப் பாடல்கள். 

         பாடல்கள் வெளியீட்டு விழா அழைப்பினை இத்துடன் இணைத்துள்ளேன்.

        நேரமும் சூழலும் கை கொடுத்தால். 

       நீங்களும் வாருங்கள்... நண்பர்களே..! 

        உங்கள் அன்பின் வாழ்த்தோடு என் கலைப்பயணமும் தொடரும்...                     

        மிகுந்த நன்றி: இயக்குநர் பி.வி.பிரசாத் சார்.