Mar 23

வீட்டுவசதிக்காக பெருந்தொகையை ஒதுக்கியுள்ள லிபரல் அரசு

நிதி அமைச்சர் Bill Morneau லிபரல் அரசின் இரண்டாவது வரவு செலவுத்திட்டத்தை வெளியிட்டுள்ளார்.


லிபரல் அரசின் இரண்டாவது வரவு செலவுத்திட்டத்தில் $ 11.2 பில்லியன்கள் வீடில்லாமை ஒழிப்பு மற்றும் வீட்டுவசதிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.  இந்த நிதி ஒதுக்கீடு, நாடளாவிய ரீதியில் காணப்படும் வீட்டுவசதி தொடர்பான நெருக்கடி நிலைமையை முடிவுக்குக் கொண்டுவர எடுக்கப்பட்ட ஆரம்ப  நடவடிக்கை ஆகும் என, வீடில்லாமை ஒழிப்பு மற்றும் வீட்டுவசதிகளுக்காகப் குரல் கொடுப்போரால் கருதப்படுகிறது.

இவ்வாறு ஒதுக்கப்பட்ட தொகையில், டொரொன்டொ மாநகருக்கென எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பது குறித்த விபரங்கள் இன்னமும் தெரிவிக்கப்படவில்லை. ஒதுக்கப்பட்ட இந்த தொகையான $ 11.2 பில்லியன்கள், எதிர்வரும் 11 வருட காலப்பகுதியில் செலவு செய்யப்பட உள்ளது. இதில் $ 3 பில்லியன்கள் எதிர்வரும் 5 ஆண்டு காலப்பகுதிக்குள் வீடமைப்பு மற்றும் வீட்டு வசதி உருவாக்கல் ஆகியவற்றுக்காகச் செலவழிக்கப்படும்