Mar 23

விசாரணைகளை நிறுத்த மலித் ஜயதிலக்க எம்.பி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழுத்தம் ; அநுர குமார

கடற்படையினரால்  கடத்தப்பட்ட ஐந்து மாணவர்கள் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் மலித் ஜயதிலக்க எம்.பி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழுத்தம் பிரயோகம் செய்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாய்கக சபையில் நேற்று தெரிவித்தார்.

யுத்த காலத்தின் போது யுத்ததிற்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லாதவர்களை  கடற்படையினர் கடத்தியுள்ளனர். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் இலஞ்சம் தொடர்பான தீடீர் சோதனை முற்பண கணக்கின் வரையறைகளில்   திருத்தம் மேற்கொள்ளல் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு  உரைாற்றுகையில்

ஒரு நாட்டின் யுத்தம் நடைபெறும் போது ஏற்படும் இழப்புகள் மிகவும் சாதாரணமாகும். அதன்காரணமாகவே அதனை நாம் யுத்தம் என்கிறோம். யுத்தத்தில் அழிவுகளே இடம்பெறுகின்ற. அது ஒருபோதும் இடம்பெற கூடாது.எனினும் இலங்கையிலும் யுத்தம் நடைபெற்றது. அந்த யுத்ததின் போது விடுதலை புலிகள் தமது இலக்குகள் வெற்றிக்கொள்வதற்காபோராடினர். அதேபோன்று முப்படையினர் தமது இலக்குகள் வெற்றி பெறுவதற்கு போரிட்டனர்.

ஆனால் யுத்த காலத்தின் போது யுத்தத்தின் போர்வையில் பலவந்தமாக கடத்தப்பட்டு கப்பம் கோரிய சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. இதன்படி கடற்படை தளபதியின் உத்தரவிற்கமைய கடத்தல் சம்பவம் நடந்தேறியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.