Jul 06

கரும்புலிகள் நாள்! கிளிநொச்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்தில் மிகவும் உணர்வெழுச்சியாக.

தமிழர்களின் விடுதலைக்காக நேரம் குறித்துத் தம்மையே தற்கொடையாக்கிய கரும்புலிகள் நாள் நிகழ்வுகள் யூலை-5 தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனது ஒழுங்கமைப்பில் கிளிநொச்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் மிகவும் உணர்வெழுச்சியாக இடம்பெற்றுள்ளது.

தமிழ் மக்களின் விடிவுக்காக நேரம் குறித்துத் தம்மையே தற்கொடையாக்கிய கரும்புலிகள் நாள் நிகழ்வுகள் யூலை-5 இன்றைய தினம் மாலை 3.00 மணிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனது ஒழுங்கமைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் மிகவும் உணர்வெழுச்சியாக இடம்பெற்றுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற கரும்புலிகள் நாள் நிகழ்வுகளில் ஆனையிறவு வெற்றிச் சமரின் போது தமிழ் மக்களின் விடுதலைக்காக தன் இன்னுயிரை ஈகம் செய்த கரும்புலி மாவீரன் மேஜர் நந்தன் அவர்களது சகோதரன் மகேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு ஈகச்சுடரினை ஏற்றி மலர் மாலையை அணிவித்து வைத்ததனைத் தொடர்ந்து இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மாவீரர்களின் தந்தையர்கள், சகோதரர்கள், ஏனைய உறவினர்கள் மற்றும் தமிழ் தேசிய உணர்வாளர்களால் மலர் வணக்கம் இடம்பெற்றிருந்தது. 

இதில் கரும்புலி மாவீரர்களை நினைவுகூர்ந்து அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிர்களை உவந்தளித்த வரலாறுகள் உள்ளடங்கிய நினைவுப் பகிர்வுகளும் மிகவும் உணர்வெழுச்சியாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.