Jul 06

பிரித்தானிய மான்செஸ்டர் விமான நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான பொதியால் பரபரப்பு

பிரித்தானிய மான்செஸ்டர் விமான நிலையத்தில்  அவதானிக்கப்பட்ட சந்தேகத்துக்கிடமான  பொதி காரணமாக பெரும் புதன்கிழமை  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கையான  அந்தப் பொதி அவதானிக்கப்பட்ட பகுதியிலிருந்த விமானங்களிலிருந்து பயணிகள்  வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினரால்  அந்தப் பொதி கட்டுப்பாட்டின் கீழ் பல தடவைகள் வெடித்து பரிசோதிக்கப்பட்டது.

இதன் போது அந்தப் பொதியில் அபாயகரமான வெடிபொருள் எதுவும் இருப்பதற்கான சான்று எதுவும் காணப்படவில்லை என பிராந்திய  அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.