Mar 23

அனைத்து குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்; பிரதியமைச்சர் எரான்

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புபட்டவர்கள் உட்பட அனைத்து குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அரச தொழில் முயற்சி பிரதியமைச்சர் ஏரான் விக்கிரமரட்ன சபையில் உறுதியளித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழு இலஞ்சம் தொடர்பான திடீர் சோதனைகள் முற்பணக் கணக்கின் வரையறைகளில் திருத்தம் மேற்கொள்ளல் தொடர்பான சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற் றிய அவர்

தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாக எதிரணி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை எனவும் தொடர்ச்சியாக கூறுகின்றார்கள்.

ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் உட்பட அனைத்துக் குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த விடயத்தில் நான் பொறுப்புடன் பதிலளிக்கின்றேன்.

நாம் ஒருபோதும் எந்தவொரு குற்றவாளிகளையும் பாதுகாக்கும் நோக்கத்தில் செயற்படவில்லை. நீதியை நிலைநாட்டுவதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் என்றார்.