Mar 23

வேகமான வளர்ச்சியில் இரண்டாமிடத்தில் கொழும்பு துறைமுகம்; அமைச்சர் அர்ஜூன

கொள்கலன்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற துறைமுகங்களுள் மிக வேகமான வளர்ச்சியை கொண்ட இரண்டாவது துறைமுகம் கொழும்பு துறைமுகமென  துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

இவ்வளர்ச்சி வீதமானது 10.6% வீதமாக பதிவுச் செய்யப்பட்டுள்ளது. ' தற்சமயம் இலங்கையில் சமாதானமான அரசியல் சூழ்நிலை நிலவுகின்றது. முதலீட்டாளர்கள் மற்றும் அரசாங்கம் மிகவும் நட்புடன் செயற்படுகின்றன என்றார்

மொரோக்கோவில் நடைப்பெற்ற சர்வதேச கிரான்ஸ் மொன்டான சமுத்திரவியல் மகாநாட்டில் கலந்துக்கொண்ட  அமைச்சர் அர்ஜூன ரணதுங்க

கொழும்பு , ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் திருகோணமலை ஆகிய வணிக துறைமுகங்களில் முதலீடுகள் மேற்கொள்வது தொடர்பாக உங்களுடைய அவதானத்தை செலுத்த முடியும். இம்முதலீட்டு சந்தர்பங்கள் தொடர்பாக அறிந்துக்கொள்ளும் பொருட்டு எங்கள் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம் என்றார்