Mar 23

கொழும்பில் 551 தமிழர்கள் கடத்திகொலை செய்ய ஆணையிட்டவர் கோட்டாவே; அமைச்சர் மனோ

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச  உண்மைக்கு புறம்பான விடயங்களை கூறினாலும் கொழும்பில் தமிழர்களை வெள்ளை வேன்களில் கடத்தியவர்களுக்கு ஆணையிட்டவர் அவர்தான் என்பதை நான் அறிவேன்.

அதற்கமையவே கடந்த காலங்களில் கொழும்பில் 551 தமிழர்கள் கடத்தப்பட்டு கொலைச் செய்யப்படார்கள் என தேசிய கலந்துரையாடல் சகவாழ்வு மற்றும் அரச கரும் மொழிகள் அமைச்சர் மனே கணேசன் தெரிவித்தார்.

புதிதாக செப்பனிடப்பட்டு  புணர்நிர்மானம் செய்யப்பட்ட கொழும்பு கதிரேசன் வீதியினை பார்வையிட வந்திருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,

தற்போது முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய  ராஜபக்வுக்கும் மற்றும் அமைச்சர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் வாதவிவாதம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த அரசாங்கத்தின் காலத்தில்  ரகசிய கொலை கும்பல் இருந்ததா இல்லையா என்பது குறித்தே மேற்படி விவாதம் எழுந்துள்ளது.

அவ்வாறு  இருந்தது என்று நான் அறிவேன். என்னை விட அதனை யாரும் அறிந்திருக்க முடியாது.

காரணம் கடந்த காலத்தில் கொழும்பில் தமிழர்கள் கடத்தப்பட்ட போதும் கொலை செய்யப்பட்ட போதும் அதற்கு எதிராக நாம் வீதியில் நின்று போராடினோம். அப்போது எனது இடது கையாக பாராளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜூம் வலது கையாக  ஊடகவியலார் லசந்த விக்கிரமதுங்கவும் என்னுடன் இருந்தார்கள்

பெருந்தொகையான தமிழ் வர்த்தகர்கள் கப்பம் கேட்டு கஷ்டப்டுத்தப்பட்டுள்ளார்கள். கொடுமைப்படுத்தப்பட்டார்கள். வகை தொகையின்றி கைது செய்யப்பட்டார்கள்.

பாரிய அட்டூழியங்கள் நடந்தன அநீதிகள் நாட்டில் இடம்பெற்றன அதனை கண்டித்து போரடியும் இருக்கின்றோம். அதனாலேயே தான்  அந்த காலத்தில் ரகசிய கொலை கொம்பல்கள் இருந்தது என்பது சகலருக்கும் தெரிந்த விடயமாக இருந்தது.

அதனை இல்லையென்று கோத்தபாய ராஜபக்சவினால் கூற முடியாது. காரணம் அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த இவரே மேற்படி விடயங்களுக்கு ஆணையிட்டார். அந்த அலங்கோங்கள் தான் இன்றும் எமது நாட்டை ஜெனீவாவில் சென்று சீரழிகின்றது என்றும் சுட்டிக்காட்டினார்