Jul 05

மகாராணியின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு விருந்துபசாரம்

எலிசபெத் மகாராணி மற்றும் எடின்பேர்க் கோமகன் ஆகியோரின் ஏற்பாட்டில் மேற்கு டன்பார்டன்ஷயர் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கான விருந்துபசார நிகழ்வொன்று இடம்பெற்றது.

பிரித்தானிய மன்னரின் ஸ்கொட்லாந்திலுள்ள உத்தியோகப்பூர்வ இல்லமான ஹொலிரூட் மாளிகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விருந்துபசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முறை நடைபெற்ற விருந்துபசார நிகழ்வில், சமுதாயத்திற்கு சிறந்த பங்காற்றியவர்களுக்கான சிவிக் விருது பெற்றவர்கள் மற்றும் அவ்விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் ஆகியோரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

ஸ்கொட்லாந்தின் 32 உள்ளூராட்சி சபைகளில் ஒன்றான மேற்கு டன்பார்டன்ஷயரில் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கும், தொண்டர்களுக்குமான விருந்துபசார நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.