இலங்கையின் தேசிய, சர்வதேச கடன்தொகை இருமடங்கால் அதிகரிப்பு
வாராந்த அமைச்சரவை தகவல்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதியமைச்சர் அமைச்சர் அஜித் பெரேரா கூறுகையில்,
இலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் நிர்மாண நடவடிக்கைகளுக்காகவும் இதுவரையில் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் இலங்கையின் கடன் தொகையானது 9ஆயிரத்து 720 பில்லியன் ரூபாய்களாகும்.
கடந்த 2010ஆம் ஆண்டு இலங்கையின் கடன் தொகையானது 4 ஆயிரத்து 590 பில்லியன் ரூபாய்களாக காணப்பட்டது. எனினும் அது இரு மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த காலத்தில் வாங்கிய கடன்களில் எந்தவித அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்காத நிலையில் தொடர்ந்தும் கடன்களை பெற்று நாட்டின் தடைப்பட்ட அபிவிருத்தி மற்றும் மூலதன நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது.