Mar 22

வில்பத்து தொடர்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தொடர்பு படுத்தி ஊடகங்கள் போலிப் பிரச்சாரம்-என்.எம்.நஸீர்


வில்பத்து தொடர்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தொடர்பு படுத்தி ஊடகங்கள் போலிப் பிரச்சாரம் அரசாங்கம் நடவடிக்கையொடுக்க வேண்டும் - முன்னால் வடமேல் மாகாணசபை உறுப்பினர் என்.எம்.நஸீர் (MA)

-றிம்சி ஜலீல்-

வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்கி, அவர்களுக்கு உண்மை நிலைகளை தெளிவுபடுத்த வேண்டிய ஊடகங்கள் இன்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி மக்களை தூண்டிவிடும் வேலையை செய்கின்றது அரசாங்கம் இதற்க்கு வெகுவிரைவில் நடவடிக்கையெடுக்க வேண்டும் என முன்னால் வடமேல் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்டத்தலைவருமான என்.எம். நஸீர் (MA) தெரிவித்தார்.

 அன்மையில் பிங்கிரிய தேர்தல் தொகுதி கிணியம பிரதேசத்தில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்கள் சந்திப்பு மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் நிகழ்வின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் இர்பான்,  பிரதேசசபை உறுப்பினர் சபீர்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயலாளர் இம்ரான் கான்,  பண்டுவஸ்நுவர தொகுதி அமைப்பாளர் ரியாத் ஆகியோரும் உடன் இருந்தனர்.

“வில்பத்துவுக்கும் மன்னார் மாவட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சுமார் 25 வருடங்களுக்கு பின்னர், தாம் முன்னர் வாழ்ந்த முசலி பிரதேசத்துக்குச் சென்று குடியேறி 5 வருடங்களின் பின்னரே, இவ்வாறான பிரச்சினை எழுந்தன.

மீள்குடியேறிய மக்களும் கௌரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் வில்பத்துவை அழிப்பதாக பிழையான பிரசாரங்களை பல தனியார் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களும் செய்துவருகின்றது.

இந்த பிரதேசத்தின் வரலாற்றை அறிந்திராத இந்த ஊடகங்கள் தமக்கு கிடைத்த பிழையான தகவல்களின் அடிப்படையிலையே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்னெடுத்து தென்னிலங்கையில் சிங்கள மக்களிடம் பிரசாரங்களை மேற்கொண்டனர். இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகத்துக்காக அயராது உழைக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை ஒரு வேண்டாதவாராகவும், பிழையானவராகவும் ஆக்குவதற்கு இன்னும் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த குற்றச்சாட்டின் உண்மை நிலைமைகளை நாம் நேரடியாக சென்று பார்வையிட்ட போதே எம்மாலும் பல உண்மைகளை அடையாளம் காணமுடிந்தது. அத்தோடு ஊடகங்கள் இந்த செய்தியை எவ்வாறு திறிவுபடுதி இலாபம் தேடும் முயற்சியில் ஈடுபாடுகின்றது என்பதையும் இதன் பின்னனியில் டயஸ்போராக்கள் இருப்பதையும்  உனர முடிந்தது.

அங்கு முஸ்லிம் பள்ளிகள் வீடுகள் என பல்வேறு ஆதாரங்கள் உள்ளது காட்டை அழித்து அந்த இடங்களில் குடியேற்றங்களை போலியாக உருவாக்க வேண்டிய தேவை கௌரவ அமைச்சர் அவர்களுக்கு எப்போதுமில்லை என்பதை உனர்வுபூர்வமாக அறிந்து கொள்ள முடிந்தது. 

மக்களை LTTE பயங்கரவாதிகள் விரட்டியடித்த போது வெரும் சொப்பின் பேக்குடன் வந்தவர்களில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் ஒருவர் அவரினால் இன்று எமது குருநாகல் மாவட்டமே அபிவிருத்தி கண்டுள்ளது எனவே அவரை பலப்படுத வேண்டியது எமது கடமையாகும் எனவும் தெரிவித்தார்.