Jul 05

தாதியர்களை மிரள வைத்த குழந்தை!

குடும்ப மாது ஒருவர் பெற்றெடுத்த குழந்தை உலகிலேயே பெரிய குழந்தைகளில் ஒன்ற பெருமைஅயைப் பெற்றுள்ளது

கோலின் ஆஸ்டின் கேய்ஸ்லர் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்தக் குழந்தை 6.5 கிலோ எடையில் பிறந்தது. இக்குழந்தை பிறந்த பொழுதே 5 மாத குழந்தையைப் போல் பெரியதாக இருந்தது.

“எங்கள் குழந்தை பெரியதாகத்தான் இருக்கும் என நாங்கள் முன்னரே எதிர்பார்த்தோம். ஏனெனில், என் மனைவியின் கர்ப்பகாலத்தில் அவளின் வயிறு இயல்புக்கு மாறாக பெரியதாக இருந்தது. ஆனால், இவ்வளவு பெரியதாக குழந்தைப் பிறக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என அக்குழந்தையின் தந்தை ஆர்தர் சொன்னார்.

என் மனைவி பிரசவித்த பொழுது, குழந்தையின் அளவைக் கண்டு தாதியும் மருத்துவரும் மிரண்டுவிட்டார் என ஆர்தர் வேடிக்கையாக கூறினார். மருத்துவர்கள் குழந்தையின் எடையை அளக்க முயன்ற பொழுது அவர்களின் தராசில் குழந்தையை வைக்க இடம் போதவில்லை எனவும் அவர்கள் கூறினர்.