Mar 23

கொலை விசாரணைகளை அரசில் உள்ளவர்கள் மூடிமறைக்க முயற்சி; நிதியமைச்சர் ஆதங்கம்

எனது நண்பன் லசந்த விக்கிரமசிங்கவினதும் வசீம் தாஜுதீனினதும் கொலை விசாரணைகள் எமது அரசிலுள்ள சிலரினால் தாமதிக்கப்பட்டு வருகின்றன என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இலஞ்ச அல்லது மோசடி விசாரணை ஆணைக்குழுவின் திடீர் சோதனை முற்பண வரையறை தொடர்பான  சட்டத்தின் மீதான  விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்;

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பிணைமுறி விடயம் தொடர்பாக எனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய போவதாக குறிப்பிட்டிருந்தார். எனினும் வழக்குத் தாக்கல் செய்யவில்லை. இவர்கள் போலியான நாடகங்களையே அரங்கேற்றுகின்றனர்.

அத்துடன் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை விசாரணைக்கு என்ன நடந்தது. எனது நண்பன் லசந்த விக்கிரமசிங்கவின் கொலை விசாரணைக்கு என்ன நடந்தது.

மேற்குறித்த விசாரணைகளை எமது அரசாங்கத்தில் உள்ள சிலர் மூடிமறைக்க பார்க்கின்றனர். அதற்கு இடமளிக்கவே கூடாது. இது தொடர்பிலான விசாரணை துரிதமாக முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் உடன் தண்டிக்கப்பட வேண்டும்  என்றார்.