Mar 23

ஐ. நா மனித உரிமைகள்கூட்ட தொடரினை முன்னிட்டு பிரித்தானியாவில் தொடர் போராட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரினை முன்னிட்டு பிரித்தானிய வாழ் தமிழர்களினால் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.. 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டமானது கடந்த மாதம் 26 ஆம் திகதி உணவு தவிர்ப்பு போராட்டமாக தொடங்கி இன்று பாரிய எழுச்சி போராட்டமாக உருவெடுத்துள்ளது. 

 தமிழ் மக்களின் சமகால பிரச்சனைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கவும்கேப்பாபிலவு  மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும்இ அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்இ போர் குற்றத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொடர்போராட்டம்  நடைபெற்று வருகின்றது. 

இந்த போராட்டத்தில் பல  நூற்றுக்கணக்கான இளைஞர்களும் பிரித்தானிய வாழ்  தமிழ் மக்களும் பிற தமிழ் அமைப்புகளும்  கலந்து கொண்டு தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரித்தானிய மக்களை கவரும் வண்ணம் இத்தொடர்  போராட்டம்  23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது.