Jul 04

அதிகார பகிர்வு விடயம்: தொடரும் பேச்சுவார்த்தைகள்

அயர்லாந்தின் அதிகார பகிர்வு குறித்த விடயத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் மேலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நேற்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த வடக்கு அயர்லாந்தின் மாநிலச் செயலாளர் ஜேம்ஸ் புரோக்கன்ஷியர், அதிகார பகிர்வு குறித்த சிறந்த ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவ்வாறு உடன்படிக்கை ஒன்று எட்டப்படாத பட்சத்தில், வரவுசெலவுத் திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.