Mar 14

T-20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு – அஞ்சலோ மத்தியூஸ் அவுட்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T-20 தொடருக்கான லசித் மலிங்க தலைமையிலான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மூவகை போட்டிகளிலும் விளையாட தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

இதனை அடுத்து நடைபெற்றுவரும் ஒருநாள் போட்டியை 4-0 என இழந்துள்ள நிலையில் அடுத்து T-20 தொடரில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் இத் தொடருக்கான மலிங்க தலைமையிலான இலங்கை அணி குழாமை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

அதில் சிரேஷ்ட வீரர் அஞ்சலோ மத்தியூஸ் இடம்பெறவில்லை. மேலும் அவிஷ்க பெர்னாண்டோ, சடீர சமரவிக்ரம, அஞ்சலோ பெரேரா, பிரியமல் பெரேரா, அசித்த பெர்னாண்டோ மற்றும் ஜெப்ரி வண்டர்சே ஆகியோர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.