Mar 14

வடக்கு கிழக்கு மக்களின் தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை ; விஜயகலா

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “வடக்கு, கிழக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான பல திட்டங்கள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அது வரவேற்கத்தக்கது.

வடக்கு, கிழக்கு மாகாணம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். யுத்தத்தினால் பேரிழப்புக்களைச் சந்தித்த, மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டும்.

வடக்கிலிருந்து வெளியேறிய முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் துரித கதியில் தீர்க்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கிலிருந்து வெளியேறிய அனைத்து மக்களும் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.