Mar 14

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் முதல் நபர் ஒரு பெண்…

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் முதல் நபர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அதிகாரியான ஜிம் பிரிடென்ஸ்டைன்,  வானொலி உரையாடல் நிகழ்ச்சியில் ஒன்றில்  அண்மையில் கலந்துகொண்டார்.

இதன்போது , செவ்வாய் கிரகத்துக்கு  மனிதர்களை அனுப்புவது குறித்து உரையாடிய அவர், செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் முதல் நபர் ஒரு பெண்ணாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நாசாவின் எதிர்கால செயல்திட்டங்களில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனவும் அவர்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.