Jul 04

கனடாவில் இவ்வருட கோடைகால வேலைவாய்ப்புக்கள் 18% ஆல் அதிகரிப்பு

இவ்வருடக் கோடைகால  வேலைவாய்ப்பு விளம்பரங்கள் 18% ஆல் அதிகரித்துள்ளதாக வேலைவாய்ப்புக்களை இணையவழியாக விளம்பரப்படுத்தும் ஒரு இணையத்தளம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் அறியவந்துள்ளது.  பல துறைகளிலும் இவ்வேலைவாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவற்றில் 20% ஆனவை நிர்வாகம் மற்றும் கணக்கியல் துறைகளிலேயே இருப்பதாகவும் இந்த ஆய்வின் மூலம் மேலும் தெரியவந்துள்ளது.

கனடாவின் 150 ஆவது ஆண்டு தினக் கொண்டாட்டங்கள் காரணமாக அதிகரித்துள்ள உல்லாசப் பயணிகளின் வருகையும்  இந்த அதிகரிப்பிற்கு  காரணமாக இருக்கக் கூடும் எனவும் கூறப்படுகின்றது.