Jul 04

கனடா தினத்திற்காக வருகை தந்துள்ள இராட்சத இறப்பர் வாத்தும் சர்ச்சைகளும்

கனடா தினக் கொண்டாட்டங்களின் போது உல்லாசப் பயணிகளைக் கவருவதற்காக மஞ்சள் நிறத்திலான ஆறுமாடிகள் உயரம் கொண்ட இராட்சத இறப்பர் வாத்து ஒன்று, டொரொன்டொ துறைமுகப் பகுதியில் மிதக்கவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து தருவிக்கப்பட்ட இந்த வாத்து கனடாவின் 150 ஆவது தினத்துடன் எவ்வாறு  தொடர்புபட்டுள்ளது என்று சிலரால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

13,600 கிலொ கிராம் எடையுடைய இந்த இராட்சத இறப்பர் வாத்தினை ஜூல, ஆகஸ்ட் மாதங்களுக்கு வாடகைக்கு எடுக்க ஒன்ராரியோ மாகாண அரசு $ 200,000  அளவான தொகையைச் செலவிட்டமை கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.