Jul 04

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய பயணத் தடைகளும் கனேடியர்கள் எதிர்நோக்கும் சவால்களும்

அமெரிக்க அதிபர் ட்ரம்பினால் அறிமுகப்படுத்தப்பட  புதிய பயணத் தடை கடந்த வியாழன் (ஜுன் 27)  முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இத்தடை  ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், யேமன் ஆகிய ஆறு இஸ்லாமிய நாடுகளுக்கே பொருந்தும். இத்தடை உத்தரவு ஆறு மாதங்களுக்கு அமுலில் இருக்கும்.

இத்தடையுத்தரவு கனேடியர்களை எவ்வாறு பாதிக்கும் ?

இத்தடையுத்தரவு அமுலாக்கம் செய்யப்பட்டதன் பின்னரே இதன் முழு அளவிலான பின்விளைவுகள் அறியப்படும் என குடிவரவு சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் கனேடிய நிரந்தர வதிவிட உரிமை பெற்றவர்களும், கனேடியப் பிரசைகளும் பாதிக்கப்படுகின்றனரா? இக்குறிப்பிட்ட ஆறு நாடுகளைத் தமது பூர்வீகமாகக் கொண்ட  கனேடியப் பிரசைகள் பாதிக்கப்படக்கூடும் என ஒட்டாவா நகரில் உள்ள குடிவரவு சட்டவல்லுனர் Bhramba Kullur கூறுகிறார்.

இத்தகையோர் மேலதிகமான குடிவரவு மற்றும் பாதுகாப்புத் தொடர்பான கட்டுப்பாடுகளை எதிர்நோக்கவோ அல்லது அமெரிக்காவிற்குள் உட்பிரவேசிக்க தடைவிதிக்கப்படவோ கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.