Mar 23

இலங்கையில் பொறுப்புகூறாமை தொடர்கின்றது; சர்வதேச மன்னிப்பு சபை

  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை குறித்த அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை தற்போது இணைந்து செயற்பட்டு வருகின்றமை வரவேற்கப்பட வேண்டிய விடயமென்றாலும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை இன்னமும் நீடித்து வருகின்றது.

2015 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப் பரிந்துரைகளில் ஒரு சில விடயங்கள் மட்டுமே அமுல்படுத்தப்பட்டுள்ள.

ஆனால் பெரும்பாலான பரிந்துரைகள் இழுத்தடிப்புகளுக்கு உட்பட்டுள்ளன. பாரதூரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறியமை தொடர்பான நிலைப்பாடுகளுக்கு இலங்கை பதிலளிப்பதில் காலம் கடத்தி வருகின்றது.

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறும் விவகாரத்தில் சர்வதேச பங்களிப்புடன் கூடிய பொறிமுறைமை என்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் செயிட் அல் _செய்னின் பரிந்துரைக்கு ஆதரவளிக்கின்றோம்.  அதன் ஊடாக பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.