Mar 23

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி 3ஆம் கட்ட உடன்படிக்கை விரைவில்

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்ட மூன்றாம் கட்ட பணிகள் இறுதி உடன்படிக்கை இல்லாது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் வெகு விரைவில் இறுதி உடன்படிக்கையில் கைச்சாத்திடப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

மூன்றாம் கட்ட பணிகள் முடிவடைந்த பின்னர் இலங்கையின் பொருளாதார நகர்வுகளின் அடிப்படையில்  40 வீத இலாபம் இலங்கைக்கு கிடைக்கும் வாய்புகள் உள்ளது எனவும் அரசாங்கம் குறிப்பிட்டது.  

வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பு இன்று புதன்கிழமை பாரளுமன்ற குழுவரை இலக்கம் 2இல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட  இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.