Mar 23

இலங்கை - இந்திய இராணுவ அதிகாரிகள் மட்ட வருடாந்த கலந்துரையாடல் ஆரம்பம்

இலங்கை - இந்திய இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான  6 ஆவது  வருடாந்த கலந்துரையாடல் சிறிமாவோ பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்திய இராணுவத்தின் சார்பில் மேஜர் ஜெனரல் சஞ்ய தலைமையில் நான்கு அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.மேஜர் ஜெனரல் ஏ.பி. டி விக்ரமரட்ண தலைமையிலான குழுவினர் இலங்கை சார்பில் பேச்சுக்களில் கலந்துக் கொண்டனர். 

தொடர்ந்தும் மூன்று நாட்கள் இடம்பெற உள்ள இந்த இலங்கை - இந்திய இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு வார்த்தையின் பின்னர் இந்திய குழுவினர் இராணுவ தளபதியை சந்திக்க உள்ளனர். 

செவ்வாய்கிழமை இலங்கையை வந்தடைந்த இந்திய இராணுவ அதிகாரிகள் தொடர்ந்தும் மூன்ற நாட்கள் இடம்பெற உள்ள இரு தரப்பு இராணுவ பேச்சுக்களில் கலந்துக்கொள்ள உள்ளனர். 

நேற்று புதன் கிழமை ஆரம்பிக்கப்பட்ட முதல் நாள் கலந்துரையாடலின் போது இரு நாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்க கூடிய கூட்டு பயிற்சிகள் , இராணுவ ஒத்துழைப்புகள் , பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் என பல்வேறு துறைகளை மையப்படுத்திய வகையில் அவதானம் செலுத்தப்பட்டதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.