Mar 23

பெண்கள் பாடசாலைகளுக்கு அருகில் பொலிஸ் பாதுகாப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பெண்கள் பாடசாலைகளுக்கு அருகில் சீருடை மற்றும் சிவில் உடைகளில் பொலிஸாரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மனைத்துள்ளது.

நேற்று முன் தினம்  கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் சிலர்இ பொரளை பகுதியிலுள்ள யசோதரா பெண்கள் பாடசாலையில் அத்துமீறி நுழைந்துள்ளனர். 

அத்துடன்இ அங்குள்ள மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பீதியுறும் வண்ணம் செயற்பட்டுள்ளதோடுஇ பாதுகாப்பு ஊழியர் ஒருவரையும் இவர்கள் தாக்கியுள்ள சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ள  நிலையிலேயே  கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள அனைத்து மகளிர் பாடசாலை அருகிலும் பாதுகபபு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்தார்.