Mar 23

சிறையில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார் விமல்

வாகன மோசடி விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை சிறையில் ஆரம்பித்துள்ளார்.

மெகஸின் சிறைச்சாலையில் அவருக்கு வழங்கப்பட்ட காலை நேர உணவினை அவர் பெற்றுக்கொள்ள மறுத்ததன் ஊடாக அவரது இந்த தனிப்பட்ட போரடத்தை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உப்புல் தெனிய கேசரிக்கு தெரிவித்தார்.

அரசியல் காரணங்களுக்காக தனக்கு பிணை வழங்காமல் தொடர்ச்சியாக தன்னை விளக்கமறியலில் வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே அவர் இவ்வாறு தனிப்பட்ட ரீதியில் வுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.