Jul 03

கனடாவுக்கு புதிய விண்வெளி வீரர்கள்

கனடாவின் புதிய விண்வெளி வீரர்கள் இருவர் பிரதமர் ஜஸ்டின் ரூடோவால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கனடா தனது 150ஆவது பிறந்த நாளை கொண்டாடிய வேளையில், பிரதமரின் இந்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டாவாவில் இடம்பெற்ற கனடா நாள் நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், கனடாவின் புதிய விண்வெளி வீரர்களாக கல்கரியைச் சேர்நத ஜெனீஃபர் சைடி மற்றும் அல்பேர்ட்டாவைச் சேர்ந்த யோசுவா குட்ரிக் ஆகியோரின் பெயர்களை அறிவித்துள்ளார்.

இவர்களில் ஜெனீஃபர் சைடி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் என்பதுடன், இயந்திரப் பொறியியலாளராகவும் பயணியாற்றி வருகிறார். மற்றையவரான யோசுவா குட்ரிக் இயந்திரப் பொறியியல் மற்றும் பாதுகாப்பு கற்கைகள் என்பவ்ற்றில் உயர் பட்டப் படிப்புகளை மேற்கொண்டுள்ளவர் என்பதுடன், கனேடிய விமானப் படையிலும் விமானியாக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் நேற்றைய இந்த அறிவிப்பினை அடுத்து, அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட ஜெனீஃபர் சைடி, தனக்கு இவ்வாறு விண்வெளி வீரராக வேண்டும் என்ற ஆர்வம், கனடாவின் முதலாவது பெண் விண்வெளி வீரர் 1992ஆம் ஆண்டில் விண்வெளிக்கு சென்ற போது ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல தமக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி மிகவும் மகிழ்வதாகவும், கனேடிய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் தனக்கும் ஒரு இடம் கிடைத்ததை பெருமையாக எண்ணுவதாகவும், கனேடிய அரச விமானப்படையில் லெப்டினன்ட் கேணலாகவும் உள்ள யோசுவா குட்ரிக் தெரிவித்துள்ளார்.

இந்த விண்வெளி வீரர்களுக்கான தெரிவின் போது, தம்மைப் போலவே மேலும் பல விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், விமானிகள் என்று அசாத்திய திறமைகள் உள்ள கனேடியர்களைச் சந்திக்கும் வாய்ப்பு தம் இருவருக்கும் கிடைத்ததாகவும், மிகப்பெரும் திறமைசாலிகான பலரும் இவ்வாறு கனடாவில் உள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் இன்று கியூபெக்கில் உள்ள கனேடிய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமையகத்தில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்த்ககது.