Mar 23

களுத்துறை துப்பாக்கிச்சூடு;'பத்தரமுல்ல பண்டி' கைது

களுத்துறை வடக்கு சிறைச்சாலையில் இருந்து கடுவலை நீதிவான் நீதிமன்றுக்கு பிரபல பாதாள உலகக் குழு தலைவர் சமயங் மற்றும் அவரது சகாக்கள் நால்வரை ஏற்றிச் சென்ற சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்தி    7 பேரை படுகொலை செய்தவர்கள் என சந்தேகிக்கபடும் பாதாள உலகக் குழுவினரின் முக்கிய நபராக கருதப்படும் பத்தரமுல்ல பண்டி என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் உளவுப் பிரிவுக்கு கிடைத்த சிறப்பு தகவல் ஒன்றுக்கு அமைவாக விஷேட அதிரடிப்படையின் கட்டளை தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீபின்  நேரடி கட்டுப்பாட்டில் செல்லக் கதிர்காமம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கை ஒன்றின் போதே 25 வயதான மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்