Mar 22

இங். பாராளுமன்றமருகே துப்பாக்கி சூடு: 2 பேர் பலி, 12 பேர் படுகாயம்

இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு அருகில் இனந்தெரியாத நபர் மேற்கொண்ட துப்பாக்கிபிரயோகத்தில் இருவர் உயிரிழந்ததோடு 12இக்கும் மேற்பட்டோ காயமடைந்துள்ளனர். 

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் பகுதியில் பாராளுமன்றம் அமைந்துள்ளது. 

பலத்த பாதுகாப்பு நிறைந்த அப்பகுதியில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்பதற்கு முன், அங்குள்ள பொலிஸ்காரர்களுடன் ஒரு நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

பாலத்தில் இன்று மர்ம நபர் ஒருவர் திடீரென தனது துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதன்போதே அங்கிருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தையடுத்து பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு பாராளுமன்ற பணிகள் நிறுத்தப்பட்டு, பாராளுமன்ற வளாகம் மூடப்பட்டது. அங்குள்ள அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். 

பிரதமர் தெரசா மே பாதுகாப்புடன் வெளியே அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.