Mar 22

அடுத்த மாதம் இலங்கை செல்கிறார் ரஜனிகாந்த்

இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் பயனாளிகளிடத்தில் கையளிக்கவுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது சங்கர் இயக்கத்தில் '2.0' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன்,  முன்னாள்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர். இதனால் இந்தப் படத்திற்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

இந்நிலையில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 9ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை பயனாளிகளிடத்தில் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.