Mar 22

வட கொரியாவின் ஏவுகணையை ஏவும் பிந்திய பரிசோதனை தோல்வி; தென் கொரியா

வட கொரியாவால் மேற்கொள்ளப்பட்ட  ஏவுகணையை ஏவிப் பரிசோதிக்கும் பிந்திய  நடவடிக்கையொன்று தோல்வியைத்  தழுவியுள்ளதாக  தென் கொரியா  தெரிவிக்கிறது.

இதன்போது எத்தனை ஏவுகணைகள் ஏவிப் பரிசோதிக்கப்பட்டன  என்பது  குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

 வட கொரியாவால் ஏவப்பட்ட ஏவுகணையொன்று ஏவப்பட்டு சில செக்கன்களில் வெடித்துச் சிதறுவதை கண்டறிந்துள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கிறது.

 வட கொரியாவுக்கு ஏவுகணைகளை ஏவிப் பரிசோதிக்க  ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் அந்தத் தடையை மீறி வட கொரியா ஏவுகணைப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.