Mar 22

நைஜீரியாவில் 4 தற்கொலைக் குண்டு தாக்குதல்கள்

 வட கிழக்கு நைஜீரியாவில்  போகோ ஹராம் தீவிரவாதிகளின் தாக்குதல்களால் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த முகாமொன்றில்  இன்று புதன்கிழமை இடம்பெற்ற  4  தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 20  பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாகரிகள் தெரிவிக்கின்றனர்.

மெய்டுகுரி நகரின் புறகரப் பகுதியிலுள்ள அந்த முகாம்  இந்தத் தாக்குதல்களால்  தீப்பற்றி எரிந்து அழிவடைந்துள்ளது.

 அந்த முகாமின் நான்கு வெவ்வேறு பகுதிகளில் ஒரே சமயத்தில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

 மேற்படி தாக்குதலில்களில் வயதுவந்த  5   ஆண் தற்கொலைக் குண்டுதாரிகள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.   அவர்களில் ஒரு தற்கொலைக் குண்டுதாரி அணிந்து வந்த தற்கொலை மேலங்கி அவர் முகாமை சென்றடைவதற்கு முன்னரே வெடித்ததாக  கூறப்படுகிறது.

 இந்தத் தாகடகுதலுக்கு இதுவரை எந்தவொரு குழுவும் உரிமை கோராத போதும் போகோ ஹராம் தீவிரவாதிகளே காரணம் என நம்பப்படுகிறது.